info messageHey Guys, Are you looking for `New Year Party 2018` ticket. Book Ticket Via CoimbatoreEvents.in x
Via Facebook

என் பெயர் காஞ்சரமரம் En peyar Kancharamaram -A Modern Tamil Play

DharaniDharan : 09-09-2017 to 09-09-2017 : Hindustan College Of Arts And Science_[H!CAS]
: 06:00 pm   Rs : ~

ஹிந்துஸ்தான் கலை கல்லூரியுடன் இணைந்து் உடல்வெளி நம் காலத்தின் பெரும் எழுத்தாளரை மதிக்கின்றது. இந்தியாவின் மிக முக்கியமான எழுத்தாளர் கோணங்கி. கோணங்கியின் பி்திரா நாவலில் இருந்து விரியும் நாடகம் ,
"என் பெயர் காஞ்சரமரம் "

காஞ்சரங் குச்சியைச் செதுக்கிச் செதுக்கி செந்தேரியில் மணல்மகுடி பிறந்தது, பேய் மகளிர் காஞ்சர மரத்தின் கிளைக்கிளையாய் அயர்ந்திருக்கிறார்கள். இலையிலையாய் பேய்களின் ரேகை படிந்திருக்கிறது. அவற்றின் காய்ந்த சருகுகளின் உரையாடலை கேட்க வருகிறீர்கள். 10 மைல் தொலைவில் அணங்கு பீடித்து விடுகிறாள். நாவில் சங்கிலிபோட்டு ஆடுகிறாள், வனமரப் பாதைகளில் வள்ளி ஓடையில் கொலை செய்யப்பட்ட வள்ளி திரும்பி வருவாளென்று ஊரைச் சுற்றி சங்கிலியடித்து வைத்திருக்கிறார்கள் நெஞ்சில் மயிர்முளைத்தவர்கள். உடை மரங்களின் பேய்க் கூச்சலிடுகிறாள் வள்ளி. அவளைக் கூட்டி வரும் ஓடை சேருமிடம் உலக மயத்தின் சக்கரங்கள் சுழன்று ஓடும் நாற்கரச்சாலையில் முட்டித் திரும்புகிறது… சாவு வேகத்தில் ஜன்னி வேகத்தில் கருப்பு தார்ரோடு ஓடிக்கொண்டிருக்கும் போது வள்ளியை காணவில்லை… திரும்பவும் வந்தாள். காஞ்சர மரம் திறந்து உள்ளே மறைகிறாள்… கொமண்டி அப்பத்தா காஞ்சரங் கிளையை ஒடிக்க ஒடிக்க இரத்தம் கசிகிறது பசித்த பேய்களின் மரம்.
தலைகீழாக ஊன்றி வைத்த பனைகளும் பேய்களும் கூச்சலிடும் காற்று. அங்கே காஞ்சர இலைகளில் படுத்து உருண்டவர்கள் மணல்மகுடி நடிகர்கள். சூரங்குடிச் செந்தேரியில் காஞ்சரங் குச்சிகளைச் சுற்றிச் சுற்றி பேய்களின் நடமாட்டம். 12,000 வருடங்களுக்கு முந்திய ஊழியில் மண்மாரிப் பொழிந்த தேரிமேடுகள். பலசெம்மண் ஊர்கள் அழிந்து உதிர்ந்த மேடுகள். காளைகளின் குளம்படிகள் உதிர்ந்து கொம்புகள் உதிர்ந்து அந்த கொம்புகள் ஊதி ஊதி, கொம்புச் சீப்புகள் சீவிச் சீவி பாடிவந்த சீதாளக்குறத்திகள் ஏடு திறந்து காஞ்சரமரத்தின் சொல்கதையைப் பாடி வருகிறார்கள் உங்களுக்காக. மரமாக நீங்கள் மாறினால் அன்றி கிளிகளைப் பிடிக்க முடியாது… காஞ்சர மரமாக மாறினால் அன்றி பேய்களின் கதைகளைப் புரிந்து கொள்ள முடியாது உங்களால். ஒரு தொல் கதைக்குள்லிருந்து தான் எல்லா உயிரினங்களும் பிறந்திருக்க வேண்டும். “என் பெயர் காஞ்சரமரம்” என்ற நாடகத்திற்கு வேர், சிலப்பதிகாரத்தில் வரும் சக்ரவாளக் கோட்டத்தில் தலை தொங்கும் மரமாகச் சுற்றிக் கொண்டிருக்கும். காஞ்சர மரமே இடாகினி பேய். அவள் காஞ்சர மரமாக மாறி இருப்பது தான் காரணம்.
பேய்களின் ஆதரவில்லாமல் கதைகள் வனங்களில் இருப்பதில்லை. மிருகங்களின் (காளை) அழைப்பினால் நாடகம் பார்க்க வந்திருக்கிறீர்கள். பூமத்திய ரேகைப் நடிகைகளும், நடிகர்களும் காளைகளில் தாவி வருகிறார்கள். பேய்களைக் கூட்டிவந்து சிரசில் காஞ்சரங் குச்சியை அரைந்து கம்மங்காட்டில் கொமண்டி அப்பத்தா, அவர்களை கழுத்துத்தொடியக் கதிர் அறுக்க கட்டளையிட்டாள். பேய்கள் தானியங்களையும், கதைகளையும் ஏமாந்து அறுவடை செய்கின்றப்ன. இந்த காட்டு இலைகளின் ரேகையிலும் பேய் விரல்படுகிறது. பேய்மகள் ரேகைதான் மரங்களுக்கு உள்ளன… உலகில் பசித்தமரம் காஞ்சரமரமாகும். பசித்த மரங்கள் அடிவானில் கதறுகின்றன. காஞ்சரமரம் நாடக ஒத்திகை எப்படி சுழன்றுச் சுழன்று மண்புழு அரசன் நாட்டியமாகத் தொடர்கிறது பாருங்கள். காணமல் போன விலங்குகள் ஒவ்வொரு ஒத்திகையிலும் வந்து, வாழ்ந்த நடிகர்களின் வாசனையைக் கொடுத்துவிட்டுப் போகின்றன. மணல்மகுடியில் காணமல் போன மண்முகமூடிகள் விலங்குகளாக மாறி இந்த நாடகத்திற்கு வருகின்றன. ஏனெனில் இந்த நாடக மூலத்தின் பிரதி “என் பெயர் காஞ்சரமரம்” எழுதப்பட்டது தங்கமாள்புரச் செந்தேரியில்… அந்தச் சிவப்பு மணல் பிரதி என்பது மறைந்து போய்விட்ட ஒரு சடங்கு நடனக் கலைஞன், நம் நவீனக் கதைச்சொல்லி பாடிப் பாடி தரையில் விட்டுச் சென்ற காலடித்தடங்களே தவிர வேறொன்றுமில்லை ஒடிந்த கலப்பை மீது விவசாய எலும்புகளும் நொறுங்குகின்றன. எலும்பில்லாத மண்புழு அரசன் எழுந்து எழுந்து ஆடுகிற நாட்டியம் தொடங்குகிறது… காணவாருங்கள்…